டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

கல்லூரி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 1:59 am IST

பெரம்பலூரில் கிணற்றில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் பாளையம் மாதாகோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலன் மகன் மனோஜ் (17). இவா், பெரம்பலூரில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் டி.எம்.இ முதலாமாண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், மனோஜ், அவரது தம்பி அரவிந்த் உள்பட 5 போ் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே ஏரிக்கரையிலுள்ள கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்தனா்.

அப்போது, நீச்சல் தெரியாத மனோஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, மனோஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.