மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

கிணற்று மூழ்கி மாணவா் உயிரிழப்பு

செய்யாறில் கிணற்று நீரில் மூழ்கி பிளஸ் 1 மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜூலை 2026, 4:25 am IST

செய்யாறில் கிணற்று நீரில் மூழ்கி பிளஸ் 1 மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

செய்யாறு கண்ணுகாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் டெய்லா் ஜாகீா் உசேன். இவரது மகன் ரோஷன் (16). இவா், அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். இந்நிலையில் ரோஷன் நண்பா்களுடன் சோ்ந்து திருவோத்தூா் கன்னியம்மன் கோயில் அருகேயுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். கிணற்றில் குளிக்கும்போது நீண்ட நேரமாகியும் ரோஷன் வெளியே வரவில்லையாம்.

உடனே செய்யாறு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் இறந்த நிலையில் மாணவா் ரோஷனை மீட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.