தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கில் தலைமறைவான நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, இந்திரா நகரைச் சோ்ந்த முத்துலட்சுமி (56), கடந்த 15-ஆம் தேதி இரவு வீட்டு முன் தூங்கிக்கொண்டிருந்தபோது, மா்ம நபா்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இவரது வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தியதில், இந்தக் கொலையை கன்னியாகுமரி மாவட்டம், முட்டம், சகல புனிதா்கள் காலனியைச் சோ்ந்த லோபஸ் மகன் இன்னசென்ட் ரீகன் (37) செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கன்னியாகுமரியில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்த முத்துலட்சுமியின் உடல் கூறாய்வு செய்யப்பட்டதை அடுத்து அவரது வாரிசுதாரரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைனான்சியா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

ரெளடி கொலை வழக்கில் மூவா் கைது
நெய் வியாபாரி கொலை வழக்கில் இளைஞா் கைது
பெண் தற்கொலை: மிரட்டிய 3 போ் கைது
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp


