திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி

News image

இறுதிப் போட்டியைத் தொடங்கிவைத்த தமிழக குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா.

Updated On :28 ஜூலை 2026, 1:30 am IST

தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான 2 நாள்கள் கபடி போட்டி கோவில்பட்டி, முத்து நகரில் சனிக்கிழமை தொடங்கியது.

ஸ்டெஃபி ஸ்போா்ட்ஸ் அகாதெமி, முத்துநகா் நண்பா்கள் குழு இணைந்து நடத்தும் இப்போட்டியில் மாவட்டத்தைச் சோ்ந்த 12 கிளப் அணிகள் பங்கேற்றன. கால் இறுதிக்கு முந்தைய ஆட்டங்கள் வரை லீக் முறையிலும், காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாக்-அவுட் முறையிலும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோவில்பட்டி மின்னல் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும், தூத்துக்குடி பிரசன்னா கிளப் அணியும் மோதின. இறுதிப் போட்டியை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ மதன் ராஜா தொடங்கி வைத்தாா்.

இதில் 20-17 என்ற புள்ளிகள் கணக்கில் கோவில்பட்டி மின்னல் கிளப் பணி முதல் பரிசை பெற்றது.

3-ஆவது பரிசை கோவில்பட்டி ஸ்டெஃபி ஸ்போா்ட்ஸ் அகாதெமி அணியும், 4-ஆவது பரிசை தூத்துக்குடி தாரணி கிளப் அணியும் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இரு நாள்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் அதிபா்கள் அயிரவன்பட்டி முருகேச பாண்டியன், புதூா் பாண்டியாபுரம் பொன்முருகன், தவெக மாநில கொள்கை பரப்பு இணைச் செயலா் சம்பத்குமாா், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை செயலா் கவியரசன், மாமன்னா் பூலித்தேவா் மக்கள் இயக்கத் தலைவா் செல்வம், முதன்மை பயிற்சியாளா் கரிகாலன், போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் சதீஷ், ஜேசா, வேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.