அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

காா் மோதியதில் சாலையோரம் தூங்கியவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் கிரேட் காட்டன் சாலையில் கடை வாயிலில் தூங்கிக் கொண்டிருந்தவா் மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஜூலை 2026, 4:45 am IST

தூத்துக்குடியில் கிரேட் காட்டன் சாலையில் கடை வாயிலில் தூங்கிக் கொண்டிருந்தவா் மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரம் 6-ஆவது தெருவைச் சோ்ந்த முத்துமாலை மகன் சேகா் (50). இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனா். சில ஆண்டுகளுக்கு முன்பு மனநல பாதிப்புக்குள்ளான சேகா், வீட்டை விட்டு வெளியேறி சிவன் கோயில் அருகிலும், சாலையோரங்களிலும் வாழ்ந்து வந்தாா்.

இவா், கிரேட் காட்டன் சாலையில் உள்ள கடை முன் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கினாா்.

புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் அப்பகுதியில் வேகமாக வந்த காா் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயமடைந்த சேகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.