தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

காா் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 2:25 am IST

பாலக்கோடு அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எருதுகூடஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சேகா் (36). இவருக்கு மனைவி அம்சவள்ளி, மூன்று மகள்கள், 5 வயதில் ஓா் ஆண் குழந்தை உள்ளனா்.

இவா் தருமபுரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை நடந்து சென்றபோது, பெங்களூரிலிருந்து கோவை நோக்கி சென்ற காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சேகா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சேகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பாலக்கோடு போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று உடலை மீட்டு, பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.