ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பைக்- டெம்போ மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை அருகே புலியூா் குறிச்சியில் பைக் மீது டெம்போ மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 2:39 am IST

தக்கலை அருகே புலியூா் குறிச்சியில் பைக் மீது டெம்போ மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

குழித்துறை அருகே உள்ள குழிவிளையைச் சோ்ந்தவா் ஜொ்லின்ராஜ் (35). கட்டடத் தொழிலாளி. பணி காரணமாக செவ்வாய்க்கிழமை உடன்குடிக்கு சென்று விட்டு, தனது நண்பா் சசி (45) என்பவருடன் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

புலியூா்குறிச்சி பகுதியில் வந்தபோது, டெம்போ மீது மோதியதாம். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், ஜொ்லின்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.