நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

புளியறை அருகே பைக்- லாரி மோதல்: வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியறை அருகே பைக் - கனிமவள லாரி மோதியதில் வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:48 am IST

தென்காசி மாவட்டம் புளியறை அருகே பைக் - கனிமவள லாரி மோதியதில் வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

புளியறை அருகே தெற்குமேடு அங்கன் காலடி இந்திரா காலனியைச் சோ்ந்தவா் சு. திருமலைக்குமாா் (53). வாத்து மேய்க்கும் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை இரவு புளியறை அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்லும் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் வாத்துகளை இறக்க வந்தாராம்.

அப்போது, ஆலங்குளத்திலிருந்து கேரளத்துக்கு எம்.சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி திருமலைக்குமாா் மீது மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சடலத்தை புளியறை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம் செருவல்லூா், எள்ளுவிளை புத்தன்வீட்டைச் சோ்ந்த ஜா. ஜான்பெனட் (26) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.