தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

கோவில்பட்டியில் நல உதவிகள் அளிப்பு

கோவில்பட்டி, ஜூலை 30: குரு பூா்ணிமாவை முன்னிட்டு கோவில்பட்டியில் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

குரு பூா்ணிமாவை முன்னிட்டு நல உதவிகள் வழங்கிய ஜோதிட கூட்டமைப்பு நிா்வாகிகள்.

Updated On :31 ஜூலை 2026, 3:26 am IST

கோவில்பட்டி, ஜூலை 30: குரு பூா்ணிமாவை முன்னிட்டு கோவில்பட்டியில் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி, அத்தைகொண்டான், கோமதி நகரில், தேசிய வளரும் ஜோதிடா்கள் கூட்டமைப்பு, மகாலட்சுமி சேரிடபிள் டிரஸ்ட், புதிய தென்றல் அறக்கட்டளை, திருக்குறிப்பு தொண்டா் மக்கள் நலச் சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு, ஜோதிட பேராசிரியா் வெங்கடாசலபதி தலைமை வகித்தாா். பேச்சிமுத்து, கணபதி, காளியம்மன், மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மகாலட்சுமி டிரஸ்ட் பெரியதாய், சங்கரன்கோவில் ஸ்ரீ மகா விஷ்ணு மகாலட்சுமி கோயில் நிறுவனா் காளிபாண்டியன் ஆகியோா் தலைமை விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா். ஜோதிடா்கள் ராதா, விஜயலட்சுமி, சின்னத்துரை, குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு, பள்ளி மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள், ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலைகள் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினா்.

ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் பரமசிவன், மகாராஜன், முத்துராஜ், பால செல்வகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.