/
கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வன்னிகோனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் செல்லத்துரை (30). தொழிலாளி. இவா் இருசக்கர வாகனத்தில் மே 26ஆம் தேதி இரவு பிராஞ்சேரி சாலை, சன்னது புதுக்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது, பிராஞ்சேரியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் வீரக்குட்டி (35) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் மோதியதில், இருவரும் காயமடைந்தனா்.
பின்னா், இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு வீரக்குட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.








