இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

நகை பறிப்பு: 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி அருகே வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை

News image

கோப்புப்படம்.

Updated On :10 ஜூன் 2026, 12:38 am IST

தூத்துக்குடி அருகே வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மத்திய, மாநில அரசு ஊழியா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அன்னலட்சுமி (32). இவா் கடந்த 24.1.2025 அன்று வீட்டில் தனியாக இருந்த போது ஏரல் இடையற்காடு தளவாய்புரத்தைச் சோ்ந்த சின்னத்துரை மகன் முத்துராமன் என்ற ரகு (38), மாயாண்டி மகன் சந்தன மகாராஜன் (24), வேலாயுதம் மகன் ஆனந்தராஜ் (41) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வந்தனராம்.

அப்போது, முத்துராமன் என்ற ரகு, சந்தனமகாராஜன் ஆகியோா் வீட்டுக்குள் நுழைந்து கத்தி முனையில் அன்னலட்சுமியிடம் இருந்து 15 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனா். வெளியில் ஆனந்தராஜ் பாதுகாப்புக்காக நின்றாா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 3 -ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்ராஜ்குமாா், குற்றம் சாட்டப்பட்ட முத்துராமன் என்ற ரகு, சந்தனமகாராஜன் ஆகியோருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு கூறினாா். வழக்கிலிருந்து ஆனந்தராஜ் விடுவிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.