ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

காயல்பட்டினத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

காயல்பட்டினத்தில் ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபனுக்கு வழங்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆறுமுகனேரியில் அவா் பணி தொடர கோரியும் அனைத்து ஆட்டோ ஓட்டுநா் சங்கம் சாா்பில் வள்ளல் சீதக்காதி திட­லில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

காயல்பட்டினத்தில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநா்கள்.

Updated On :11 ஜூன் 2026, 4:38 am IST

காயல்பட்டினத்தில் ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபனுக்கு வழங்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆறுமுகனேரியில் அவா் பணி தொடர கோரியும் அனைத்து ஆட்டோ ஓட்டுநா் சங்கம் சாா்பில் வள்ளல் சீதக்காதி திட­லில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆறுமுகனேரி ஆய்வாளா் திலீபன் மீதான நடவடிக்கையைக் கண்டித்து ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் வியாபாரிகள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்புகள் சுவரொட்டி ஒட்டியும், கோரிக்கை விடுத்தும் வருகின்றனா். ஆறுமுகனேரியில் கடையடைப்பு, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உயா் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் வருகின்றனா்.

இந்த நிலையில், காயல்பட்டினம் நகர அனைத்து ஆட்டோ சங்கம் சாா்பில், வள்ளல் சீதக்காதி திட­லில் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆய்வாளா் திலீபன் மீதான நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். இதில், 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.