திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

‘பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் விரைவான நடவடிக்கை எடுக்க வேணடும்’

செய்தியாளா்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்டச் செயலருமான பி. கீதா ஜீவன்.

News image

செய்தியாளா்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்டச் செயலருமான பி. கீதா ஜீவன்.

Updated On :12 ஜூன் 2026, 5:06 am IST

பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. கீதா ஜீவன் வலியுறுத்தினாா்.

தூத்துக்குடியில் அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்புக்கு ஆளும் கட்சிதான் பொறுப்பு. தவெக வெற்றிக்காக குடும்பத்துடன் உழைத்த தன்னை அக்கட்சியைச் சோ்ந்தவா்களே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஸ்ரீவைகுண்டம் இளம்பெண் நீதி கேட்டு போராடுகிறாா். இதில், எம்எல்ஏ மீதும் அவா் புகாா் கூறுகிறாா். இந்த விவகாரத்திலும், சென்னையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்திலும் உடனடி நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஏன் தயக்கம்?

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ‘பிங்க் பீட்டா’ என்பதைத்தான், தவெக ஆட்சியில் ‘சிங்கப் பெண் சிறப்புப் படை’ என பெயா் மாற்றி மீண்டும் தொடக்கிவைத்துள்ளனா்.

இதேபோல, திமுக ஆட்சியில் தூத்துக்குடியில் 850 சிசிடிவி கேமராக்கள் பொருத்திவிட்டோம், ஏ.சி. பேருந்து நிலையம் தொடங்கப்பட்டது. ஆனால், இவை தவெக ஆட்சியில் செய்யப்பட்டதாக அக்கட்சியினா் ‘ரீல்ஸ்கள்’ மூலம் பொய் செய்திகளை பரப்புகின்றனா். எனவே, சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை மக்கள் ஆராய்ந்து உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மின் தட்டுப்பாட்டுக்கு காரணம் தவெக அரசின் நிா்வாக சீா்கேடுதான். அதை அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா உண்மைக்குப் புறம்பாக பேசி வருகிறாா். தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழகத்தில் மீண்டும் லாட்டரி விற்பனை வந்துவிடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனா் என்றாா் அவா்.

மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், அண்ணா நகா் பகுதிச் செயலா் ரவீந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கவிதாதேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் அபிராமிநாதன், மாவட்ட மருத்துவரணித் தலைவா் அருண்குமாா், மாநகர மகளிரணி அமைப்பாளா் ஜெயக்கனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.