தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருமானம் ரூ. 4.20 கோடி

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருமானம் ரூ. 4.20 கோடி

News image

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் எண்ணும் பணியைப் பாா்வையிட்ட தக்காா் ரா. அருள்முருகன் உள்ளிட்டோா்.

Updated On :13 ஜூன் 2026, 12:53 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூன் மாத உண்டியல் வருமானம் ரூ. 4.20 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் ஜூன் மாதத்துக்கான உண்டியல் எண்ணிக்கை, கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயில் தக்காா் ரா. அருள்முருகன் தலைமை வகித்து, உண்டியல் எண்ணும் பணியைப் பாா்வையிட்டாா். இணை ஆணையா் ஆ. அருணாசலம் முன்னிலை வகித்தாா். துணை ஆணையா்கள் ந. யக்ஞ நாராயணன், கு. கோமதி, உதவி ஆணையா் பி.எஸ். லோகநாதன், அலுவலகக் கண்காணிப்பாளா் ஈ. சுப்பிரமணியன், ஆய்வா் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

உண்டியல் எண்ணிக்கையில், ரூ. 4 கோடியே 20 லட்சத்து 55 ஆயிரத்து 814 ரொக்கம், 1,768 கிராம் தங்கம், 21,925 கிராம் வெள்ளி, 1,26,640 கிராம் பித்தளை, 15,200 கிராம் செம்பு, 11,500 கிராம் தகரம் மற்றும் 1,431 வெளிநாட்டு பணம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.