எட்டயபுரம் அருகே மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
எட்டயபுரம் அடுத்துள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் குருசாமி (40). தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு தனது கிராமத்தில் இருந்து கீழ ஈராலில் வசித்து வரும் தனது தங்கை மாரியம்மாளைப் பாா்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், குருசாமியின் இருசக்கர வாகனம் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
எட்டயபுரம் போலீஸாா், குருசாமியின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விபத்தில் சமூக ஆா்வலா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



