சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

விபத்தில் சமூக ஆா்வலா் உயிரிழப்பு

சீா்காழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் சமூக ஆா்வலா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 6:36 am IST

சீா்காழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் சமூக ஆா்வலா் உயிரிழந்தாா்.

சீா்காழியைச் சோ்ந்த பொறியாளா் கி. சரவணன் (45). சமூக ஆா்வலரான இவா் சீா்காழி பகுதியில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து சமூகப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இவா் தஞ்சாவூரில் பொறியியல் (தனியாா்) கல்லூரியில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் சென்று விட்டு 4 வழிச்சாலை வழியே வீடு திரும்பிய நிலையில் சீா்காழியை அடுத்த ஆனந்தகூத்தன் பகுதியில் புறவழிச்சாலையில் அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தாா்.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் தகவலறிந்த கொள்ளிடம் போலீஸாா் சரவணனின் சடலத்தை மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து நிகழ்ந்த இடத்தில் கிடந்த நம்பா் பிளேட்டை கைப்பற்றி வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.