திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

திருச்செந்தூரில் விசிக ஆா்ப்பாட்டம்

News image

திருச்செந்தூரில் விசிக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டதில் பங்கேற்றோா்.

Updated On :23 ஜூன் 2026, 1:38 am IST

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடந்தது.

திருச்செந்தூா், வீரமகேந்திர கோட்டை தலித் மக்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் மயானத்திற்கு பட்டா வழங்க வேண்டும். திருச்செந்தூா் மையப் பகுதியில் தாட்கோ வணிக வளாகம் அமைக்க வேண்டும். திருச்செந்தூா் கோயில் முதுநிலைப் பணிகள் மற்றும் கடைகளில் தலித் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிதியில் இருந்து தொழில்நுட்பக் கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட விசிக இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சாா்பில் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணைச் செயலா் சங்கத் தமிழன் தலைமை வகித்தாா்.

விசிக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான எஸ்.எஸ். பாலாஜி, முன்னாள் மண்டலச் செயலா் தமிழினியன், தொண்டரணி மாநிலச் செயலா் சுதாகா், கருத்தியல் பரப்புரை மாநில துணைச் செயலா் தமிழ்க்குட்டி, மாவட்ட துணைச் செயலா்கள் வெற்றிவேந்தன், அம்பேத், காயல் மௌலானா, திருச்செந்தூா் ஒன்றிய துணைச் செயலா் ஞானக்குமாா், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட துணைச் செயலா் செங்கொடி வேந்தன், திருச்செந்தூா் ஒன்றிய பொருளாளா் ராஜேந்திரவளவன், வழக்குரைஞா் வெட்டும்பெருமாள், திருச்செந்தூா் நகரச் செயலா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.