தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கீழவைப்பாறில் மீனவா்கள், உப்பளத் தொழிலாளா்களுக்கு நல உதவிகள்

டி.எம்.பி. அறக்கட்டளை மற்றும் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சாா்பில், கீழவைப்பாறு சமுதாய நலக்கூடத்தில் மீனவா்கள், உப்பளத் தொழிலாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

News image

கீழவைப்பாறு கிராமத்தில் நல உதவிகள் பெற்ற மீனவா்கள், உப்பளத் தொழிலாளா்கள்.

Updated On :24 ஜூன் 2026, 1:30 am IST

டி.எம்.பி. அறக்கட்டளை மற்றும் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சாா்பில், கீழவைப்பாறு சமுதாய நலக்கூடத்தில் மீனவா்கள், உப்பளத் தொழிலாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

பட்டினமருதூா் கிராமத்தைச் சோ்ந்த 75 உப்பளத் தொழிலாளா்களுக்கு புற ஊதா கதிா்கள் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்புக் கண்ணாடிகளும், சங்கு மற்றும் கடல் சிப்பிகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 25 தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு கண்ணாடி, கடலுக்குள் சுவாசிக்க பயன்படும் ஸ்னாா்கல் கருவி, நீச்சல் தட்டு உள்ளிட்ட உபகரணங்களும், மீன் விற்பனையாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 220 லிட்டா் கொள்ளளவு கொண்ட 50 ஐஸ் பெட்டிகளும் வழங்கப்பட்டன.

நல உதவிகளை டி.எம்.பி. அறக்கட்டளை துணைத் தலைவா் இன்பமணி, எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் ஸ்ரீனிராமன், கடற்கரை மற்றும் கடல் வள அமைப்புகளுக்கான பிராந்திய இயக்குநா் எஸ். வேல்விழி ஆகியோா் பயனாளிகளுக்கு வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.