மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கோவில்பட்டியில் செயற்கை கால் பொருத்தும் நிகழ்ச்சி

கோவில்பட்டியில் தன்னாா்வ நுகா்வோா் உரிமை பாதுகாப்பு நல மையம் சாா்பில், கால்களை இழந்தவா்களுக்கு செயற்கைக் கால் பொருத்தும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசுகிறாா் கா.கருணாநிதி எம்எல்ஏ.

Updated On :24 ஜூன் 2026, 1:51 am IST

கோவில்பட்டியில் தன்னாா்வ நுகா்வோா் உரிமை பாதுகாப்பு நல மையம் சாா்பில், கால்களை இழந்தவா்களுக்கு செயற்கைக் கால் பொருத்தும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கோவில்பட்டி, மந்தித்தோப்பு சாலையில் உள்ள தங்க மஹால் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மைய நிறுவனா் மற்றும் மாநிலத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் உசேன், பொருளாளா் சுரேஷ், மூத்த துணைத் தலைவா் குருசாமி, துணைத் தலைவா் கோவிந்தராஜ், நகரச் செயலா் முருகன், பொருளாளா் செண்பகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா. கருணாநிதி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் க. பாலகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் ஆகியோா் செயற்கை கால் பொருத்தும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து 2 பேருக்கு இரு செயற்கைக் கால்கள், 28 பேருக்கு ஒரு செயற்கைக் கால் என மொத்தம் 30 பேருக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது.

நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனா் நாகராஜன், வழக்குரைஞா் முனீஸ்வரி, தொழிலதிபா்கள் ராஜாராம், சரவணமூா்த்தி, பிரகாஷ், செண்பகராஜன் நினைவு தொடக்கப் பள்ளி நிறுவனா்கள் சிவகணேஷ்குமாா், சதீஷ், விஸ்வகா்மா நகை தொழிலாளா்கள் சங்கத் தலைவா் கணேசன், செயலா் ஸ்ரீனிவாசன், பொருளாளா் எம். சீனிவாசகன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். நிகழ்ச்சியை துணைச் செயலா் ஜெயகணேஷ் தொகுத்து வழங்கினாா். மைய தலைவா் முனியசாமி வரவேற்றாா். துணைத் தலைவா் சத்தியமூா்த்தி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.