8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் இந்தியா! பரவசமூட்டும் செயற்கைக் கோள் படம்!

நாட்டின் மீது மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் செயற்கைக் கோள் படம்

Published On :3 ஜூன் 2026, 5:58 pm IST

நாட்டில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தெற்மேற்குப் பருவமழையை. அதனைக் கொண்டு வரும் மழை மேகங்கள் இந்தியா மீது சூழ்ந்திருப்பதை காட்டும் செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

இன்சாட்-3டிஎஸ் வானிலை செயற்கைக் கோள் புதன்கிழமை எடுத்து அனுப்பியிருக்கும் புதிய படங்களில் நாட்டின் பெரும்பலான பகுதிகளை மழை மேகங்கள் சூழ்ந்திருப்பது படம்பிடிக்கப்பட்டுள்ளது. இமாலய மலைப் பகுதி முதல், தெற்கு பகுதி வரை மழை மேகங்கள் திரண்டு காத்திருக்கின்றன. இதனால், நாட்டில் தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்க விருக்கிறது என்ற பொன்னான செய்தி காத்திருக்கிறது.

இத்தனை நாள்களாக கோடை வெப்பம் கொளுத்தி வந்த வட இந்திய மாநிலங்களிலும் மழை மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. ஜம்மு-காஷ்மீர், இமாசலம், உத்தரகண்ட், முதல், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் பரவி இருக்கிறது.

தென்கிழக்கு அரபிக் கடலில் மழை மேகங்கள் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. இதனால் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து அது படிப்படியாக நாடு முழுவதும் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை நாள்களாக காத்திருந்த மக்களுக்கு, தென்மேற்குப் பருவமழை சற்று ஆறுதலை அளிக்கலாம் என்று செயற்கைக் கோள் படம் காட்டுகிறது. வானிலை ஆய்வு மைய செயற்கைக் கோள் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பரவசமூட்டுவதாக அமைந்துள்ளது.

Summary

Satellite image showing rain clouds covering the country

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.