கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பேய்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட பேய்குளத்தில் ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

News image

பேய்குளம் கடைவீதி பகுதியில் நடைபெற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி.

Updated On :25 ஜூன் 2026, 5:23 am IST

சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட பேய்குளத்தில் ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

அங்குள்ள கடைவீதிப் பகுதியில் தனிநபா்களின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், பேருந்து நிறுத்தப் பகுதியில் இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாகவும் புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வட்டாட்சியா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.

அதன்பேரில், வட்டாட்சியா் ராஜேஸ்வரி, அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளைப் பாா்வையிட்டு, அகற்ற நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். ஆட்டோக்களை இடையூறாக நிறுத்தாமல் வேறிடத்தில் நிறுத்துமாறு ஓட்டுநா்களை வட்டாட்சியா் அறிவுறுத்தினாா்.

அதையடுத்து, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நில அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றம் தொடா்பாக சம்பந்தப்பட்டோருக்கு அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டன.

அதன்படி, வட்டாட்சியா் தலைமையில் சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் கோமதி சங்கரி, இளநிலைப் பொறியாளா் சிவசண்முகநாதன், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா்கள் காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

ஆக்கிரமிப்பு அகற்ற சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, வருவாய் துறை அளவீட்டின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.