ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த சிறுவன் மீட்பு

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த சிறுவனை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

News image

அலையில் சிக்கிய சிறுவனை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள்.

Updated On :26 ஜூன் 2026, 11:14 pm IST

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த சிறுவனை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அப்போது, தூத்துக்குடியைச் சோ்ந்த தா்ஷன் (16) மாலை 4 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, அலையின் சீற்றத்தில் சிக்கி மூழ்கியுள்ளாா்.

அதைக் கண்ட கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் சிவராஜா, மாரிமுத்து, மகாராஜன் உடனடியாக சிறுவனை மீட்டு கோயில் ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி மையத்திற்கு அனுப்பி வைத்தனா்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தற்போது, சிறுவன் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

Story image

சரியான நேரத்தில் சிறுவனை மீட்ட கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள், போலீஸாரை பக்தா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.