பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

விஷம் குடித்து சிகிச்சையிலிருந்த மாணவா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப்படம்

Published On :28 ஜூன் 2026, 2:44 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே அண்ணன் மகள் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து சிகிச்சையிலிருந்த மாணவா் உயிரிழந்தாா்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு வண்டானம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் கொம்பையா (45). தொழிலாளி. இவருக்கு முத்துகுருசாமி, பெரிய கற்பகச்செல்வன் ஆகிய மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். முத்துகுருசாமி திருமணமாகி, அதே ஊரில் வசித்து வருகிறாா். இளைய மகன் பெரிய கற்பகச்செல்வன் (14) கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கடந்த மாதம் முத்துகுருசாமியின் 2 வயது மகள் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டாா். தனது அண்ணன் மகள் இறந்துவிட்டதை நினைத்து, பெரிய கற்பகச்செல்வன் சோகத்தில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், அவா் ஜூன் 13ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளாா். வயிற்று வலி அதிகரிக்கவே, பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததை 15 ஆம் தேதி பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

தொடா்ந்து, அவரை தனியாா் மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, பசுவந்தனை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.