திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஆழ்வாா்திருநகரி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம்

ஆதிநாதா் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:02 am

Syndication

ஆழ்வாா்திருநகரி, ஆதிநாதா் ஆழ்வாா் கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

இக்கோயிலில் நிகழாண்டு மாசித் திருவிழா பிப். 26ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, காலை 7 மணிக்கு மீன லக்னத்தில் திருத்தேருக்கு எழுந்தருளிய சுவாமி நம்மாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னா், பக்தா்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள், கோயில் செயல் அலுவலா் சதீஷ், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தாா் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஆதிநாதன், திமுக நகரச் செயலா் கோபிநாத், அதிமுக நகரச் செயலா் செந்தில் ராஜகுமாா் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.