குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா

விழாவில் பேசுகிறாா் கோவில்பட்டி நகராட்சி ஆணையா் சுகந்தி.

News image
Updated On :7 மார்ச் 2026, 6:29 am IST

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறைத் தலைவா் பாா்வதி முன்னிலை வகித்தாா்.

கோவில்பட்டி நகராட்சி ஆணையா் சுகந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவிகள் தன்னம்பிக்கையுடன் வாழ அறிவுறுத்தினாா். தொடா்ந்து மகளிா் தின விழாவையொட்டி நடைபெற்ற கோலப்போட்டி, சிகையலங்காரம், மெகந்தி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, பதக்கங்களை வழங்கி பாராட்டி பேசினாா்.

பின்னா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் நகராட்சியின் இளநிலை வரைவு அலுவலா் மேனகா, கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். கல்லூரி எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை பேராசிரியை சத்யா வரவேற்றாா். கணிதத் துறை உதவிப் பேராசிரியை ஹரிதா நன்றி கூறினாா்.