தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புதன்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனைகளில் ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 15.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்தாா்.
தமிழக பேரவைத் தோ்தலை முன்னிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி, காமராஜ் மகளிா் கல்லூரியில் ஓவியம், நாடகம், ரங்கோலிப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆட்சியா் க. இளம்பகவத் பரிசுகளை வழங்கிப் பேசினாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 பேரவைத் தொகுதிகளிலும் புதன்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனைகளில் ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 15,90,280 ரொக்கம், ரூ. 19,780 மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்புக் குழு, பறக்கும் படைக் குழுவின் நடவடிக்கைகள், ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) புவனேேஷ் ராம், மாவட்ட சமூக நல அலுவலா் பிரேமலதா, திட்ட இயக்குநா் (மகளிா்) நாகராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள் திட்ட அலுவலா் காயத்ரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அனுசியா, துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன், தூத்துக்குடி வட்டாட்சியா் திருமணி ஸ்டாலின், காமராஜ் கல்லூரித் தாளாளா் எஸ். ராமச்சந்திரன், கல்லூரி முதல்வா் எம். வான்மதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

பென்னாகரத்தில் வாகனச் சோதனையில் ரூ. 99,500 ரொக்கம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.66,000 ரொக்கம் பறிமுதல்

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


