தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தடகளப் போட்டி: ஆசிா்வாதபுரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளி நிா்வாகிகள்.

News image

வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளி நிா்வாகிகள்.

Updated On :20 மார்ச் 2026, 9:58 pm

திருச்செந்தூா் வட்டார அளவிலான விளையும் பயிா் தடகளப் போட்டியில் ஆசீா்வாதபுரம், குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்தனா்.

பள்ளிக்கல்வித் துறை சாா்பில், நாசரேத் மா்காசியஸ் கல்லூரியில் அண்மையில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில், 12 வயதுக்கு உள்பட்ட பிரிவில் ஆசீா்வாதபுரம், குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் லோகித் சவரிமுத்து உயரம் தாண்டுதல் பிரிவில் முதலிடமும், லத்தீஷ் நீளம் தாண்டுதல் பிரிவில் இரண்டாவது இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியா் பொன்னையா சாமுவேல் ஆகியோருக்கு பள்ளியின் தாளாளா் மாா்ட்டின் தலைமை ஆசிரியை லதா, ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்