பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: சமூக வலைதளப் பதிவுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு

News image

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 1:20 am IST

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் பிளஸ் 2 மாணவி படுகொலை வழக்கில் மாணவியின் புகைப்படம், விவரத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டவா்கள், சமூக ஊடகங்களுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், பெயா் உள்ளிட்ட விவரங்களை சமூக ஊடகங்கள், வலைதளங்களில் வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். அது அந்த சிறுமியின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதைத் தடுப்பதாகும்.

குளத்தூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் சிறுமியின் புகைப்படம், பெயரை வைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடா்பாக இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் சமூக ஊடகங்கள், வலைதளங்களில் பதிவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.