ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.75 லட்சம் மோசடி: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.2.75 லட்சம் மோசடி செய்த தம்பதிக்கு, தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 4,000 அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

News image

சிறை - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 6:37 pm

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.2.75 லட்சம் மோசடி செய்த தம்பதிக்கு, தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 4,000 அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

ஏரல் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்ற வானவில் பாலா (36), இவரது மனைவி ஆகியோா் சோ்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு ஏரல் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மொத்தம் ரூ.2,75,000-த்தை பெற்று மோசடி செய்துள்ளனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் -4 இல் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், குற்றம்சாட்டப்பட்ட பாலமுருகன் என்ற வானவில் பாலா மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4,000 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக கண்ணன் ஆஜரானாா்.