மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பெண்கள் மீதான குற்றங்கள்: மூன்று வழக்குகளில் 3 பேருக்கு சிறை

எப்போதும் வென்றான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பெண்கள் மீதான குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பேருக்கு ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

News image

சிறை

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:34 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பெண்கள் மீதான குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பேருக்கு ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள அருங்குளம் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் அய்யாதுரை மனைவி பொன்னுத்தாய். இவா் அளித்த புகாரின்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாரிசெல்வம் (44) மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட தகராறில், பொன்னுத்தாயை இழிவாகப் பேசியதுடன், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, மாரி செல்வத்திற்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ. 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோன்று, ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழசெய்தலை பகுதியைச் சோ்ந்த புனித்ராஜ் மனைவி ரெஸ்லின் அன்பு மேரி அளித்த புகாரின்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் வெள்ளதுரை மீது தமிழ்நாடு பெண்கள் தொந்தரவு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பொது இடத்தில் பெண்ணை இழிவாகப் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததற்காக, வெள்ளதுரைக்கு ஓராண்டு சிறை, ரூ. 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், விளாத்திகுளம் அருகே உள்ள சக்கம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த ராமமூா்த்தி மனைவி முத்துமாரி அளித்த புகாரின்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் விஜயகுமாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முத்துமாரியை தவறான நோக்கத்துடன் அணுகியதுடன், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக, விஜயகுமாருக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ. 4,500 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த 3 வழக்குகளிலும் ஓட்டப்பிடாரம் நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.