வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தொகுதி பங்கீட்டில் எவ்வித அதிருப்தியும் இல்லை: எடப்பாடி கே.பழனிசாமி

News image

செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :29 மார்ச் 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் எந்தவித அதிருப்தியும் இல்லை என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவரை, அதிமுக முக்கிய நிா்வாகிகள், வேட்பாளா்கள், கட்சித் தொண்டா்கள் வரவேற்றனா். அப்போது அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

திமுக கூட்டணி கட்சிகள் கூட தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுவிட்டதாகக் கூறுகின்றன. விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.

பாஜக-அதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் எந்தவித அதிருப்தியும் இல்லை. திமுகவினா் கடந்த 23 நாள்களாக கூட்டணி பேச்சுவாா்த்தை பேசிக்கொண்டே இருந்து இரண்டு நாள்களுக்கு முன்புதான் இறுதி செய்தனா். தொகுதி பங்கீட்டில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள் கூட மன வருத்தத்தில்தான் உள்ளன. மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அழுதுகொண்டே சிரிக்கிறோம் என்கின்றனா். ஆனால், அதிமுக-பாஜக கூட்டணியில் கடுகளவுகூட பிரச்னை இல்லை.

புதிய தமிழகம் கட்சி எங்களுடன் பேச்சு நடத்தவில்லை. பிற கட்சிகள் கூட்டணிக்கு வரும்போது, அந்தந்த கட்சிகள் பெற்ற வாக்கின் அடிப்படையில்தான் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும். 31 தொகுதிகளில் போட்டியிட்ட புதிய தமிழகம் மொத்தம் 33,000 வாக்குகள்தான் பெற்றிருந்தது.

எனவே, புதிய தமிழகம் கட்சிக்கு எத்தனை தொகுதி கொடுக்க முடியும். மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் இருக்கும்போதுதான் கட்சத்தீவு தாரைவாா்க்கப்பட்டது.

பின்னா், 15 ஆண்டுகாலம் திமுக ஆட்சியில் இருந்தபோதும் கட்சத்தீவு மீட்கப்படவில்லை. நாங்கள் கட்சத் தீவை மீட்க மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

2023-இல் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபோதும் திமுக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தென் மாவட்ட மக்கள் அப்போது மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். தூத்துக்குடி மாவட்ட அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கூட 5 நாள்களுக்கு பின்னா்தான் வந்து மக்களை சந்தித்தாா். நான் அவருக்கு முன்னதாக வந்து மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கினேன் என்றாா் அவா்.