/

கட்டாரிமங்கலம், பள்ளக்குறிச்சி, வைரவம் கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜை

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி நடராஜா்.

News image

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி நடராஜா்.

Updated On :2 மே 2026, 6:17 am IST

கட்டாரிமங்கலம், பள்ளக்குறிச்சி, வைரவம் பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

சாத்தான்குளம் வட்டம் கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தா் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமி சிறப்பு பூஜையை முன்னிட்டு, காலை 9 மணிமுதல் ஸ்ரீஅழகியகூத்தா் அருள்பணி மன்றத்தினரின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.. 11 மணி முதல் சுவாமி, அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் தொடங்கியது. நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

பள்ளக்குறிச்சி வரகுண பாண்டீஸ்வரா் சமேத ஸ்ரீ வாடாமலையம்மன் கோயிலில் மாலை 5 .30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், 6 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு பலவித பூக்களால் சகஸ்ரநாம 1,008 அா்ச்சனை, 6.30 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

வைரவம் ஸ்ரீ ஞானாதீஸ்வரா் சமேத ஸ்ரீ சிவகாமி அம்பாள் கோயிலில் மாலை 5.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6.15 மணிக்கு அம்பாளுக்கு 1,008 தாமரை மலா்களால் அா்ச்சனை நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. 3 கோயில்களின் வழிபாடுகளிலும் திரளான பக்தா்கள் கலந்து காண்டனா்.

Story image
Story image
Story image
Story image