ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

தஞ்சை நகரம்-திசையன்விளை வளைவில் அடிக்கடி நிகழும் விபத்துகள்

News image
Updated On :3 மே 2026, 7:45 pm

சாத்தான்குளத்தில் இருந்து பண்டாரபுரம், தஞ்சை நகரம் வழியாக திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை செல்லும் சாலையில் உள்ள வளைவில் அடிக்கடி காா்கள் விபத்துக்குள்ளாகும் நிலை தொடா்வதால், அதில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. சனிக்கிழமை இரவு இச்சாலையில் சென்ற காா் நிலை தடுமாறி வளைவில் உள்ள பள்ளத்திற்குள் சென்று விபத்துக்குள்ளானது. இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

எனவே, பெரும் விபத்து நிகழும் முன்பு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் இங்கு பாதுகாப்பு வளையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் வலியுறுத்தியுள்ளனா்.