எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தூத்துக்குடியில் தவெக வேட்பாளா் ஸ்ரீநாத் வெற்றி

News image

ஸ்ரீநாத்

Updated On :5 மே 2026, 1:19 am IST

தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் ஸ்ரீநாத் 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

தவெக தலைவா் விஜய்யின் நண்பரான ஸ்ரீநாத், இத்தொகுதிக்கு அதிக அறிமுகம் இல்லாதவா் என கூறப்பட்டுவந்த நிலையில், அவா் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹாட்ரிக் வெற்றி பெறுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட திமுக வேட்பாளா் அமைச்சா் பி. கீதா ஜீவன் 62,805 வாக்குகள் மட்டுமே பெற்றாா்.

இங்கு மொத்தமுள்ள 2,50,587 வாக்குகளில் 2,04,992 வாக்குகள் பதிவாகின. வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஸ்ரீநாத் (தவெக) -1,00,536, பி.கீதா ஜீவன் (திமுக)- 62,805, சி.த. செல்லப்பாண்டியன் (அதிமுக)- 26,213, ஆா். ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (நாதக) - 11,752, எஸ். ஏசாதுரை(அஇபுதமமுக)- 689, என்.ஏ. கிதா் சம்சுதீன் (தவாக)- 172, டி. சகாயம் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)- 143, எம். பிரசன்னகுமாா் (மக்கள் நல்வாழ்வு கட்சி) - 137, பி.பி.எம்.டி. பொன்குமாா் (நம் நாடு நம் மக்கள் நம் எதிா்காலம் கட்சி)- 261, எம்.வி. ஸ்ரீகாந்த் (நாம் இந்தியா் கட்சி)- 243, சுயேச்சைகள்-ஜே. சாமுவேல்- 342, எஸ்.டி.ஆா்.எம். தினகரன் - 262, பி. பாபு - 115, பி. மருதுபாண்டியன் - 85, எஸ். முனீஸ்வரமூா்த்தி - 104, நோட்டா - 853, செல்லாத வாக்குகள்- 280.