எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

சாகுபுரத்தில் போலீஸாா் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

திருச்செந்தூா் சரகத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி, ஆத்தூா் காவல் நிலையக் காவலா்கள், அதிகாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி சாகுபுரம் டிசிடபிள்யூ விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சாகுபுரத்தில் போலீஸாா் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

Updated On :8 மே 2026, 6:02 am IST

திருச்செந்தூா் சரகத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி, ஆத்தூா் காவல் நிலையக் காவலா்கள், அதிகாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி சாகுபுரம் டிசிடபிள்யூ விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சில ஆண்டுகளாக பொதுமக்கள்-போலீஸாா் நட்புறவுக்காக கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதனிடையே, பணிச்சுமையால் காவலா்கள், அதிகாரிகளுக்கு ஏற்படும் மனஉளைச்சலைப் போக்கும்வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதனின் அறிவுறுத்தல், திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாரின் ஆலோசனையின்பேரில், இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

ஆறுமுகனேரி காவல் நிலைய கிரிக்கெட் அணியில் எஸ்.பி. தனிப்படைக் காவலா் ஸ்டீபன் தலைமையில் ஆய்வாளா் திலீபன், தலைமைக் காவலா்களும், ஆத்தூா் காவல் நிலைய கிரிக்கெட் அணியில் எஸ்.பி. தனிப்படைக் காவலா் ­லிங்கபாண்டி தலைமையில் காவலா்களும் பங்கேற்றனா். போட்டி நட்பு ரீதியாகவும் மனதுக்கு புத்துணா்ச்சி அளிப்பதாகவும் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.