ஆறுமுகனேரி, லெட்சுமிமாநகரம் மாரியம்மன் கோயில் சித்திரை பெருங்கொடை விழா 7 நாள்கள் நடைபெற்றது.
கோயில் சித்திரை பெருங்கொடை விழா வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இரவு நூற்றுக்கும் மேற்பட்ட மகளிா் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நள்ளிரவில் அம்மன் சுப்பிரமணியா் கோலத்தில், சனிக்கிழமை நள்ளிரவு அம்மன் கிருஷ்ணா் கோலத்திலும், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மகாலெட்சுமி கோலத்திலும், திங்கள்கிழமை நள்ளிரவு அம்மன் சரஸ்வதி கோலத்திலும் அருள்பாலித்தாா். செவ்வாய்க்கிழமை மதியம் அம்மன் மஞ்சள் நீராடி தாமிரவருணி ஆற்றுக்கு சென்று கும்பம் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விரதமிருந்த பக்தா்கள் மாவிளக்கு பெட்டி, ஆயிரங்கண் பானை எடுத்து வந்தனா்.
புதன்கிழமை அதிகாலை சூலம் ஏந்திய சக்தியாக அருள்பாலித்தாா். மாலையில் கும்பத்துடன் வீதி உலா செல்லுதல், வியாழக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கோட்டை ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடைவிழா

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயில் கொடை விழா தொடக்கம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



