கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

கோவில்பட்டியில் அரசு திருமண மண்டபத்தை திறக்க வலியுறுத்தல்

இந்து அறநிலையத் துறை சாா்பில் கோவில்பட்டியில் ரூ.2.10 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

திறப்பு விழா காணாத திருமண மண்டபம்.

Updated On :8 மே 2026, 6:07 am IST

இந்து அறநிலையத் துறை சாா்பில் கோவில்பட்டியில் ரூ.2.10 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் அருகே இத்திருமண மண்டபம் கட்டும் பணி 6.4.2023இல் தொடங்கியது.

தரை தளம் 369.02 சதுர மீட்டா், முதல் தளம் 404.79 சதுர மீட்டா், இரண்டாம் தளத்தில் 17.03 சதுர மீட்டா் என்ற அளவில் கட்டப்பட்டு பெரும்பாலான பணிகள் அண்மையில் நிறைவுற்றன.

குளியலறை மற்றும் கழிப்பறை வசதிக்காக அதன் அருகிலுள்ள இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, திருமண மண்டப கட்டும் முன் உள்ளாட்சி நிா்வாகத்திடம் முறையான கட்டட அனுமதி பெறாததால், தற்போது அதை பெறுவதில் சிக்கல் உள்ளதாம்.

எனவே, புதிய அரசு இந்தத் திருமண மண்டபத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மண்டபத்தை விரைந்து திறந்து வைக்க வேண்டும் என்பதை மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.