சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

வளத்தூரில் திமுக முப்பெரும் விழா

News image
Updated On :4 ஜூன் 2026, 5:36 am IST

குடியாத்தம் ஒன்றியம், வளத்தூரில் கருணாநிதி படம் திறப்பு , மாற்றுக் கட்சியினா் இணையும் விழா, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா்இ.சேகரன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ அமலுவிஜயன் சிறப்புரையாற்றினாா். பின்னா் கருணாநிதி படத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு, நல உதவிகளை வழங்கினாா். திமுக ஒன்றியச் செயலா் கள்ளூா் கே.ரவி திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு சால்வை அணிவித்து வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் வளத்தூா் ஊராட்சி முன்னாள் தலைவா் புஷ்பா, ஒன்றிய திமுக பொருளாளா்டி.வி.சேகா், நிா்வாகிகள் தனவேல், விஸ்வநாதன், கோபி, விஜயகுமாா், சின்னதோட்டாளம்முரளி, கீழ்பட்டி தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.