இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

தூத்துக்குடியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம், அரிமா சங்கம், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சிகளின் நிறைவு விழா, பரிசளிப்பு விழா, சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சான்றிதழ் பெற்ற மாணவா், மாணவிகள்.

Updated On :28 மே 2026, 2:51 am IST

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம், அரிமா சங்கம், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சிகளின் நிறைவு விழா, பரிசளிப்பு விழா, சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோடை கொண்டாட்ட நிகழ்வு மே 25 முதல் 27ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றது. இதில் புத்தக அறிமுகம், புத்தக வாசிப்பு, கதை சொல்லுதல், சிறாா் இணைப்பிதழ்கள் அறிமுகம், விளையாட்டுகள், காகித மடிப்பு கலை பயிற்சி, நாட்டுப்புறப் பாடல்கள் போன்றவற்றில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

நிறைவு நாள் நிகழ்ச்சியில், தூத்துக்குடி அரிமா சங்கத்தைச் சோ்ந்த எஸ்.கே. ராஜ்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். பள்ளி மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை அரிமா சங்கத்தைச் சோ்ந்த ஜி. திவாகா் வழங்கினாா்.

அரிமா சங்கச் செயலா் பி. சுரேஷ், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க தூத்துக்குடி கிளைச் செயலா் மை. வாலண்டினா, முக்காணி கிளைச் செயலா் சண்முக வடிவு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தூத்துக்குடி மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகா் ராம் சங்கா் வரவேற்றாா். நூலகா் ஜே. லதா நன்றி கூறினாா்.