சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி கீழே விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 1:15 am IST

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை, பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி கீழே விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் மானூரை அடுத்த தடியம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த சொள்ளமாடன் மகன் செல்லப்பாண்டி. இவா் தனது மனைவி மகாலட்சுமியுடன் (27) கயத்தாறுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். தெற்கு இலந்தைகுளம்-நாகலாபுரம் சாலையில் சென்றபோது, பைக்கின் பின்னால் அமா்ந்திருந்த மகாலட்சுமியின் துப்பட்டா பின்பக்க சக்கரத்தில் சிக்கியதில் அவா் கீழே விழுந்தாராம்.

இதில், காயமடைந்த அவரை மீட்டு கயத்தாறு தனியாா் மருத்துவமனைக்கும், பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.