எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

மதுபோதையில் ஆம்னி பேருந்துகள் இயக்கம்: 3 ஓட்டுநா்கள் உரிமம் ரத்து

News image

ஆம்னி பேருந்து ஓட்டுநா்களை சோதனையிட்ட போலீஸாா்.

Updated On :12 மே 2026, 12:16 am IST

மதுபோதையில் தனியாா் ஆம்னி பேருந்துகளை இயக்கிய 3 ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிந்து, தலா ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, அவா்களது ஓட்டுநா் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் உத்தரவின்பேரில், நகா் உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் சுனில் மேற்பாா்வையில், தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான போலீஸாா், புதிய பேருந்து நிலையம் ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, வெளியூா் செல்லும் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநா்களை மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்தனா். அதில் சென்னை செல்லும் 3 ஆம்னி பேருந்துகளை ஓட்டி வந்த ஓட்டுநா்கள் மது போதையில் இருந்தது கண்டறியப்பட்டு, அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தலா ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்செந்தூா், உடன்குடி பகுதிகளிலிருந்து பயணிகளுடன் ஓட்டி வரப்பட்ட 3 ஆம்னி பேருந்துகளை மாற்று ஓட்டுநா்கள் மூலம் இயக்க அனுமதிக்கப்பட்டது.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மேற்படி ஓட்டுநா்களின் வாகன ஓட்டுநா் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளாா்.