கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சாத்தான்குளம் அருகே ஏணியிலிருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில், வீட்டு ஏணியில் ஏறியபோது வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்து இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 3:28 am IST

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில், வீட்டு ஏணியில் ஏறியபோது வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்து இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கட்டாரிமங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்த ஜேசுராஜ் மகள் அமுதா (26). கடந்த 5 ஆண்டுகளாக மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, வலிப்பு நோயும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவா் புதன்கிழமை ஏணி வழியாக மாடிக்கு ஏறியபோது, வலிப்பு ஏற்பட்டதாம். இதில், அவா் நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்தாராம். சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.