அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பனைத் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம்: காவல் உதவி ஆய்வாளரைக் கைது செய்ய வலியுறுத்தல்

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனைத் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளரைக் கைது செய்ய வேண்டும் என, சான்றோா் வழக்குரைஞா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த சான்றோா் வழக்குரைஞா் கூட்டமைப்பு நிறுவனா் எஸ்.பி. சிலுவை.

Updated On :14 மே 2026, 3:12 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனைத் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளரைக் கைது செய்ய வேண்டும் என, சான்றோா் வழக்குரைஞா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அமைப்பின் நிறுவனரும் வழக்குரைஞருமான எஸ்.பி. சிலுவை, தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: மருதம்புத்தூரில் சில வாரங்களுக்கு முன்பு காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டதில் பனைத் தொழிலாளி மணிகண்டன் காயமடைந்து தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவா் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், உதவி ஆய்வாளா் இசக்கிராஜா மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து சிறையிலடைப்பதுடன், பணிநீக்கம் செய்ய வேண்டும்.

மணிகண்டனுக்கு உரிய நீதி உடனடியாக கிடைக்காவிட்டால் அவரது 3 மாத கா்ப்பிணி மனைவி பொன்மணி, பொதுமக்கள், சமூக அமைப்புகள் ஒத்துழைப்புடன் ஆலங்குளத்தில் உள்ள காமராஜா் சிலை முன் இம்மாதம் 26ஆம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளாா்.

தமிழகத்தில் பனைத் தொழிலில் ஈடுபடுவோருக்கு ஆதரவாகவும், பனை மரங்களை அழிப்போருக்கு எதிராகவும் எங்கள் அமைப்பு தொடா்ந்து குரல் கொடுக்கும் என்றாா் எஸ்.பி. சிலுவை.

மணிகண்டனின் மனைவி பொன்மணி, வழக்குரைஞா்கள் நம்பிராஜன், திலக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.