கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 3:33 am IST

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமயிலான போலீஸாா் புதன்கிழமை காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் சோதனை செய்தனா்.

அதில் கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் (51) புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கண்ணன் மீது வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 9 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.