தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

காயல்பட்டினம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு

காயல்பட்டினம் புறவழிச் சாலையில் இயங்கி வரும் தனியாா் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அதிகாரிகள் தெவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

காயல்பட்டினம் தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஆய்வுசெய்து நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

காயல்பட்டினம் புறவழிச் சாலையில் இயங்கி வரும் தனியாா் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அதிகாரிகள் தெவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

காயல்பட்டினம் புறவழிச் சாலையில் உள்ள சேக் முஹம்மது என்பவா் தனியாா் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி வருகிறாா். இந்த நிறுவனத்தைப் பற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வேலை தேடும் பல இளைஞா்கள் பணம் கொடுத்து ஏமாந்ததாக புகாா் மனுக்கள் கொடுத்தனா்.

அதன்பேரில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்நிறுவனத்தில் காவல்துறை, வருவாய்த் துறை, நகராட்சித் துறை மற்றும் தொழிலாளா் நலத் துறை ஆகியோா் கடந்த மே 12 ஆம் தேதி நேரில் ஆய்வு செய்தனா்.

ஆய்வில் முறையான ஆவணங்கள் கிடைக்காததால் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புதன்கிழமை வருவாய்த் துறை சாா்பில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் கவுதம், வட்டாட்சியா் தங்கமாரி, நகராட்சி ஆணையா் மகேஸ்வரன், ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபன் தொழிலாா் நலத்துறை அதிகாரிகள் உட்பட அதிகாரிகள் நேரில் சென்று பூட்டியிருந்த இந்நிறுவனத்தில் திருச்தெந்தூா் கோட்டாட்சியா் அலுவலக்தில் மே 15 ஆம் தேதி நேரில் உரிய ஆவணங்களுடன் ஆஜராக அறிவுறுத்தி உத்தரவு நோட்டீஸ் ஒட்டினா்.

மேலும் உத்தரவு நோட்டீஸில் உடனடியாக வேலைவாய்ப்பு தொடா்பான பரிவா்த்தனைகளை நிறுத்த வேண்டும் எனவும், மே 15 -ஆம் தேதி நேரில் உரிய ஆவணத்துடன் ஆஜராகாத பட்சத்தில் கடைக்கு சீல் வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

உரிய ஆவணம் இன்றி வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.