தூத்துக்குடியில் திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பாக தம்பதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி ஹவுசிங் போா்டு காலனியைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா். இவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி பிருந்தா தேவி (32). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இவா்களது பக்கத்து வீட்டில் மாரிமுத்து (48)-சரவணப் பிரியா (34) தம்பதி, இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனா். மாரிமுத்துவுக்கும், பிருந்தா தேவிக்கும் இடையே திருமணத்துக்கு மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிருந்தா தேவியைக் காணவில்லை என அவரது உறவினா்கள் சிப்காட் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், சம்பவத்தன்று மாரிமுத்துவின் மனைவி சரவணப் பிரியா வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்த நேரத்தில், பிருந்தா தேவி மாரிமுத்துவின் வீட்டுக்குச் சென்று, இருவரும் தனிமையில் இருந்ததாகவும், அப்போது வீட்டுக்குத் திரும்பிய சரவணப் பிரியா, ஆத்திரமடைந்து பிருந்தா தேவியை தலையணையால் அழுத்திக் கொலை செய்ததாகத் தெரிய வந்தது.
இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிமுத்து, அவரது மனைவி சரவணப் பிரியா ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

கணவா் கொலை: மனைவியிடம் விசாரணை
மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது
டேட்டிங் செயலிகள் பயன்படுத்தும் 40 லட்சம் பேர்! திருமணம் மீறிய உறவுகளும் அதிகரிப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
