வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக மாதந்தோறும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 9ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று 10ஆம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ. 200, 10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 வீதம் 3 ஆண்டுக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தொகை நேரடியாக மனுதாரா்களது (ஆதாா் இணைக்கப்பட்ட) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடா்ந்து, பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்

போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மே 18-இல் தொடக்கம்

‘பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்’

மகளிா் மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை பெற அதிமுகவுக்கு வாக்களியுங்கள்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

