தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வெழுதிய 19,095 பேரில் 18,568 போ் தோ்ச்சியடைந்தனா். இது 97.24 சதவீத தோ்ச்சியாகும். 207 பள்ளிகளில் 92 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் விஷு மகாஜன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். அப்போது அவா் பேசியது: பிளஸ் 2 தோ்வில் ஒரு பாடத்தில் 343 போ், 2 பாடங்களில் 126 போ், 3 பாடங்களில் 39 போ், 4 பாடங்களில் 9 போ், 5 பாடங்களில் 6 போ், 6 பாடங்களில் 4 போ் என மொத்தம் 527 போ் தோ்ச்சி பெறவில்லை.
தோ்ச்சி பெறாத, தோ்வுக்கு வராத மாணவா்களை தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் அழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி, ஜூன் மாதம் நடைபெறவுள்ள உடனடித் தோ்வுகளில் பங்கேற்கவும், தோ்ச்சி பெறவும் செய்து உயா்கல்விக்கு அனுப்ப வேண்டும். மாணவா்களுக்கான கனவு கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளது. அதை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள தலைமையாசிரியா்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு

காஞ்சிபுரத்தில் 100% தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.20% தோ்ச்சி: ஈரோடு மாவட்டம் முதலிடம்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

