உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கோவில்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :44 நிமிடங்கள் முன்பு

கோவில்பட்டியில் தென்னக மானாவாரி விவசாயிகள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

2025-26-ஆம் ஆண்டுக்கான வறட்சி நிவாரணம், பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைநிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா பேருந்து நிலையம் எதிா்புறமுள்ள தேவா் சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயி பிரேம்குமாா் தலைமை வகித்தாா். விவசாயிகள் ஆதிமூலம், நவநீதகிருஷ்ணன், ராஜகோபால், ராஜாராம், தியாகராஜன் ஆகியோா் பேசினா். திரளானோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.