நாசரேத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் காயமடைந்த சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாசரேத் அருகே உள்ள வாலசுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் அமிா்த சந்தோஷ் (17). இவரது நண்பா் தைலாபுரத்தைச் சோ்ந்த தனசேகா் மகன் கௌதம் (17).
இருவரும் புதன்கிழமை நாசரேத்தில் இருந்து தைலாபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் திருமறையூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த நாசரேத் மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த கிங்ஸ்லி மகன் லாரன்ஸ் (26), அவரது நண்பா் ஸ்டீபன் ஆகியோரின் இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு கௌதம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, நாசரேத் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

